Saturday, January 2, 2010

13உம் 17 உம்


ஜனாதிபதித் தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்தி ருக்கிறது.

எதிர்பாராத கட்சித் தாவல்கள் அரசியல் அரங்கில் புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜெனர லின் அரசியல் பிரவேசத்தால் கலக்கம் அடைந்திருக்கும் அரசு, பருப்பு முதல் பெற்றோல் வரை விலைகளைக் குறைத் துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறு திகளோ மழையாகப் பொழிகின்றன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம், இலஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவோம்... என் றெல்லாம் ஒருசாரார் வாக்குறுதிகளை அள்ளி வழங்க, பயங்கரவாதத்தை ஒழித் தோம், நாட்டை அபிவிருத்தி செய்தோம் என மற்றொரு சாரார் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிப தியை தெரிவு செய்யும் இந்தத் தேர்தல், மேற்சொன்ன வாக்குறுதிகளுக்கும் பிரசா ரங்களுக்கும் அப்பாற்பட்டு, இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு பற்றிப் பேசுவதற்கான தருணம் என்பதை அனைவரும் வசமாக மறந்துபோய் விட்டி ருப்பதாகவே தெரிகிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதி பதித் தேர்தல்களின்போது இந்நாட்டில் புலிகளின் செல்வாக்கு மேலோங்கி இருந் ததன் காரணமாக ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் இனப்பிரச்சினை தொடர்பி லான தமது கொள்கைகளை முன்னிறுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுத்தது வழமை. ஆனால், இம்முறை புலிகளற்ற சூழ்நிலையிலும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் பலமான அழுத்தங்களை வழங்கக்கூடிய சிறுபான்மை அரசியல் அணிகளற்ற நிலையிலும் இத் தேர்தல் நடைபெறுவதே தேசிய பிரச்சினைகளுக் கான முக்கியத்துவம் எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்படாமைக்கான காரணம் எனலாம்.

இருந்தபோதிலும், முப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெற்று தான் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 வது திருத்தத் சட்டத்திற்கும் அப்பால் (13 ++ ) செல்லத் தயாராக இருப்பதாகவும், 17வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட் டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற் கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

13ம், 17ம் திருத்தச் சட்டங்கள் எனும் கதையாடல்கள் போர் நடைபெற்றுக் கெண்டிருந்த அல்லது போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலப்பகுதியில் தாரா ளமாக பேசப்பட்டவை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் சமீப காலம் வரையும் 13ம் திருத்தச் சட்டம் பற்றிய சில முன்னெடுப் புக்களையும் மேற்கொண்டிருந்தார்.
குறிப் பாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு போராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வ கட்சிக் குழுவானது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சில முன்மொழிவுகளை ஆராய்ந்து ஜனாதி பதியிடம் முதற்கட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. இருந்தபோதிலும் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ பணித்ததற்கிணங்க மீண்டும் கூடி ஆராய் ந்த சர்வகட்சிக் குழு, 97 வீதமான பணிகளை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாக அறி வித்துள்ள போதிலும் இதுவரை இறுதி அறிக்கை வெளியிடப்படவில்லை.
இப்பின்னணியில்தான் இந்த ஜனாதி பதித் தேர்தல் காலத்தில் தேசியப் பிரச்சி னைகளுடன் இவ்விரு திருத்தச் சட்டங்கள் தொடர்பில் விளக்கங்களை நாம் கொண் டிருக்க வேண்டியது அவசியமாகிறது.

13ம் திருத்தச் சட்டம்

1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப் பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினடி யாக 13வது திருத்தச் சட்டமானது அப் போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்த னவால் 1988ஆம் ஆண்டு பாராளுமன்றத் தில் சட்டமூலமாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட இச்சட்டமானது மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குவதையே பிரதான கருப்பொருளாக கொண்டுள்ளது.
மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகா ரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்வதன் மூலம் அவற்றை மேலும் பலமுள்ளதாக் குவதே இதன் நோக்கம்.
இருந்தபோதிலும் மாறி மாறி ஆட் சிக்கு வருகின்ற அரசாங்கங்கள், மத்தியிலே அதிகாரங்களைக் குவித்துவைப்பதிலேயே குறியாயிருக்கின்றன. சட்டம், ஒழுங்கு களைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் அதிகாரத்தையோ மக்களுக்கிடையில் காணிகளைப் பகிர்ந்தளித்தளிப்பதற்கான அதிகாரத்தையோ வழங்க அவை பின் நிற்கின்றன.

வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தி இத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பார்க்கும்போது வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் பொலிஸாரை கூடு தலாக நியமித்து பொதுமக்களுக்கான பொலிஸ் சேவைகளை மேலும் விரிவுபடுத் தும் அதிகாரத்தை இது மாகாண சபைகளுக்கு வழங்குகிறது. இதேபோன்று வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை தடுக்கும் வகையிலான அதிகாரத்தையும் மாகாண சபைகள் கொண்டிருக்க முடியும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் சிங்களவர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை யின் சகல செயற்பாடுகளையும் கட்டுப் படுத்துபவராக அவரே விளங்குகிறார். இதனால்தான் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஏனைய அமைச் சர்களும் ஆளுநரின் கை ஓங்கியிருப்பதாக முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 22 வருடங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட 13 வது திருத்தச் சட்டமானது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றது எனும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுடன் 13வது திருத்தத் திற்கு அப்பால் சென்று, ஒரு தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும் எனும் கோரிக் கைகளும் மேலெழுந்துள்ளன.

பெரும்பாலான சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகளும், த.தே.கூ, மு.கா. போன்ற சிறுபான்மை கட்சிகளும் இதே கருத்தையே முன்வைத்து வருகின்றன.
எனவேதான், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்து தல் அல்லது அதற்கு அப்பால் சென்று ஒரு தீர்வினைக் காணல் என்பது தற்போதைக்கு மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கி றது என்பது மட்டும் உண்மை.

17ம் திருத்தச் சட்டம்

இதேபோன்றுதான் 1978 அரசியல மைப்பில் மேற்கொள்ளப்பட்ட 17வது திருத்தச்சட்டமானது நாட்டின் அரசியலில் முக்கிய இடத்தை வகிக்கிறது. 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட இச் சட்டமானது பொலிஸ், நீதி, தேர்தல் மற்றும் பொதுச் சேவை என்பன அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமா கச் செயற்பட வழிசமைக்கிறது. இதன் பொருட்டு பின்வரும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கு அதிகாரம் வழங் குவதற்கு இத்திருத்தம் வழிவகுக்கிறது.

1. அரசியலமைப்புப் பேரவை
2. பொதுச் சேவை ஆணைக் குழு
3. தேர்தல் ஆணைக் குழு
4. நீதிச் சேவை ஆணைக் குழு
5. தேசிய பொலிஸ் ஆணைக் குழு

மேற்சொன்ன திருத்தமானது இலங் கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கி யமானதொரு திருப்புமுனையில் பார்க்கப் படுகின்ற போதிலும் இவை இதுவரை நடைமுறைப்படுத்தப் படாமலிருப்பதே கவலைக்குரியது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக் குழுவை நியமிக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. அதற்கப்பால் அரச சார்பற்ற நிறுவனங்களும் சில முற்போக்கு அரசியல் வாதிகளும் 17வது திருத்தத்திலுள்ள சகல ஆணைக் குழுக்களையும் நியமிக்க வேண் டும் என அரசுக்கு அவ்வப்போது அழுத் தங்களை வழங்கி வருகின்றன.

இருந்தபோதிலும், இது தொடர்பில் அரசாங்கம் எந்தவித பதிற்குறியையும் வழங்காது மெளனம் காத்தே வருகிறது. அவ்வாறு குறித்த ஆணைக்குழுக்கள் நிய மிக்கப்படுமானால், அரசியல் பழிவாங்கல் களுக்கு இடமிருக்காது. பதவியுயர்வு, ஆட் சேர்ப்புக்கள், நியமனங்கள் என்பன நேர்மை யாக நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இனப் பிரச்சினைக்கு அப்பால், நாட்டில் நிலவும் ஊழல், மோசடி உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முடிவுக் குக் கொண்டுவர 17 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

எனவேதான், மிக முக்கியமான வர லாற்றுப் பின்னணி கொண்ட இந்த ஜனா திபதித் தேர்தலில் வேட்பாளர்கள் இத் திருத்தச் சட்டங்கள் குறித்து கூடுதல் முக் கியத்துவம் கொடுத்தல் அவசியம். அத்து டன் வாக்காளர்களும் இவை பற்றிய போதிய விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். வெறுமனே அபிவிருத்தி அல் லது சம்பள உயர்வு எனும் குறுகிய நோக் கங்களுக்கு அப்பால் இந்நாட்டின் தேசி யப் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கொண் டுவரக் கூடிய மேற்சொன்ன விடயங்க ளுக்கு வேட்பாளர்களும் வாக்காளர்களும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என நம்புவோமாக!

1 comment:

  1. hello... hapi blogging... have a nice day! just visiting here....

    ReplyDelete