கிழக்கு மாகாண மக்களுக்கும் அனர்த்தங்களுக்கும் அப்படி என்னதான் உறவோ தெரியவில்லை.
மூன்று தசாப்த கால யுத்த அனர்த்தம், ஐந்து வருடங்களுக்கு முன்னரான சுனாமி அனர்த்தம் என மிகப் பெரும் அனர்த்தங்களால் நொந்து போய் இருக்கும் அம் மக்கள் இன்று வெள்ளத்திலும் தத்தளிக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 3 வார காலமாக கிழக்கில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் வடக்குக் கிழக்கு பருவப் பெயர்ச்சி மழை காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக 83,000 குடும்பங்களைச் சேர்ந்த 302,835 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உற வினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கி வருகின்றனர். இரண்டு வாரங்க ளுக்கு மேலாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியிருக்கும் இம் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப் படவில்லை எனும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் நஷ்டஈடுகளை வழங்க அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்கள் மூலம் செய் திகள் வெளிவருகின்ற போதிலும், குறிப் பிடத்தக்க உதவிகள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை என மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசைக்கு கருத்துத் தெரி வித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரா ளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் தொடர்பில் அக்கறையற்றிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மஹிந்தவா? பொன்சேகாவா? என தேர்தல் பந்தயத்திலேயே அதிகம் ஆர்வம் காட்டிவருவதாகக் குறிப்பிடும் மக்கள், வெள்ள அனர்த்தத்தைப் பார்வை யிட்டு அதனைப் படம்பிடித்து பத்திரிகை களில் பிரசுரிப்பதில் காட்டும் ஆர்வத்தை இந்த அரசியல்வாதிகள் ஏன் நிவாரணப் பணிகளில் காட்டவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கிடையில் சுனாமி அனர்த்தத்தின் 5 ஆண்டு பூர்த்தியை நினைவு கூரக் காத்தி ருந்த கரையோரக் கிராம மக்களும் இம் முறை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளனர். சுனாமியால் பாதிக்கப் பட்டு இதுவரை நிரந்தர வீடுகள் கிடைக்காது தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வரும் கல்முனை பிரதேச செயலகப் பகுதிக் குட்பட்ட மக்கள் வெள்ளத்தினாலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மட்டுமன்றி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் சிலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிழக்கில் இம் முறை வழமைக்கு மாறாக வெள்ளம் தேங்கி நிற்பதற்கு அங்கு மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்படாத அபிவிருத்திப் பணிகளே காரணம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கமநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப் பட்ட கொங்கிறீட் பாதைகள் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு தடையாக இருப்பதாக வும் இந்த வீதிகளில் முறையான வடிகால மைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்பட வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நாடெங்கும் பெரும் பீதியைக் கிளப்பியிருந்த டெங்குக் காய்ச்சல் மீண்டும் கிழக்கில் தலைதூக்கியுள்ளது. நீண்ட நாட்களாக வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாகவே மீண்டும் டெங்கு நுளம்புகள் பெருகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் காத்தான்குடி பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து பாலர் பாட சாலைகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு விடுமுறை வழங்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.
எது எப்படியிருப்பினும், பாதிக்கப் பட்ட 3 இலட்சம் மக்களுக்கும் உரிய நிவா ரண உதவிகளை வழங்குவதோடு எதிர்வரும் காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்காத வாறு திட்டமிட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதும் அரசாங்கத்தினதும் பிரதேச அரசியல்வாதி களதும் கடமையாகும்.
வெறுமனே தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைக் குறியாகக் கொண்டு செயற்படும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் நலனைக் கருத்திற் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளே சமூ கத்திற்குத் தேவை.
No comments:
Post a Comment